கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பில் குறைகள் இருந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என்றும் இதற்கான புகார் எண்களையும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “2023ம் ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையுடன் ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசால் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் 3.01.2023 முதல் 8.01.2023 வரை குடும்ப அட்டையின் எண்ணிக்கையின் அடிப்படையில் சுழற்சி முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
இதையும் படிங்க : தேசிய அளவிலான குதிரைப்பந்தய போட்டியில் கோவை மாணவர்கள் வெற்றி..
குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் நாள்ää நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படும். பொங்கல் பரிசு நியாயவிலைக்கடை விற்பனை முனைய இயந்திரத்தின் பயோமெட்ரிக் முறை மூலம் வழங்கப்படும்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
புகார் எண்கள் :
1. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் : 0422-2300569
2. மாவட்ட வழங்கல் அலுவலர் : 9445000245
3. தனி வட்டாட்சியர் கோயம்புத்தூர் வடக்கு : 9445000246
4. தனி வட்டாட்சியர் கோயம்புத்தூர் மேற்கு : 9445000250
5. தனி வட்டாட்சியர் கோயம்புத்தூர் தெற்கு : 9445000247
6. தனி வட்டாட்சியர் பொள்ளாச்சி : 9445000252
7. தனி வட்டாட்சியர் அன்னூர் : 9445796442
8. வட்ட வழங்கல் அலுவலர் ஆனைமலை : 9361646312
9. வட்ட வழங்கல் அலுவலர் பேரூர் : 9445000249
10. வட்ட வழங்கல் அலுவலர் மதுக்கரை : 9445000248
11. வட்ட வழங்கல் அலுவலர் கிணத்துக்கடவு : 9445796443
12. வட்ட வழங்கல் அலுவலர் மேட்டுப்பாளையம் : 9445000251
13. வட்ட வழங்கல் அலுவலர் சூலூர் : 9445000406
14. வட்ட வழங்கல் அலுவலர் வால்பாறை : 9445000253
இந்த எண்களில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
செய்தியாளர் : சவுந்தர் மோகன் - கோவை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News