முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்ததாக தனியார் கல்லூரி மீது புகார்

கோவையில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்ததாக தனியார் கல்லூரி மீது புகார்

X
தனியார்

தனியார் கல்லூரி மீது புகார்

Coimbatore News : கோவையில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்ததாக தனியார் கல்லூரி மீது மலைவாழ் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்திருப்பதால் பல்வேறு அவதிக்கு உள்ளாகி வருவதாக மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை மாவட்டம் ஆலந்துரையை அடுத்து அமைந்துள்ளது நல்லூர்பதி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து மலைப்பகுதிக்கு செல்லவும், அங்கிருக்கும் கோவிலுக்கு செல்வதற்குமான பொது வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தை அப்பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளதாக நல்லூர்பதி மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தனியார் கல்லூரி மீது புகார்

பொது வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் 300 குடும்பங்கள் காட்டிற்குள் சென்று விறகுகளை எடுக்க முடிவதில்லை என்றும், அப்பகுதி மக்களுக்கான கோவிலுக்குச் செல்லவும் முடிவதில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே நல்லூர்பதி கிராம மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி புகார் மனு அளித்தனர்.

இதையும் படிங்க : கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி பகுதி ஒரு நாள் டூருக்கு ஏற்ற அட்டகாசமான இடம்...!

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆக்கிரமிப்புகளால் அவதியடைந்து வருவதாகக் கூறினர். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றி பொது வழித்தடத்தில் தார் சாலை அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த குற்றச்சாட்டு குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க முயன்றோம். ஆனால், அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.

First published:

Tags: Coimbatore, Local News