ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் புதுசா இதழியல் கல்லூரி துவக்கம்..

கோவையில் புதுசா இதழியல் கல்லூரி துவக்கம்..

கோவையில் இதழியல் கல்லூரியை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்

கோவையில் இதழியல் கல்லூரியை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்

Coimbatore News : இதழியல் கல்லூரி கோவையில் துவக்கம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை கணியூர் பகுதியில் பார்க் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு செய்தித்துறைக்கு என்று சிறப்பு கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.

இங்கு செய்தி வாசிப்பாளருக்கு மட்டுமல்லாது நிருபர், உதவி ஆசிரியர், டிஜிட்டல் மற்றும் மொபைல் ஜர்னலிசம், ஒப்பனைக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், "செய்தித்துறைக்காக பிரத்தியேகமாக கல்லூரி படிப்பு துவங்கப்பட்டுள்ளது. செய்தி வாசிப்பாளர், நிருபர், உதவி ஆசிரியர் மற்றும் கைபேசி ஜர்னலிசம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க : கொரோனா பரவல் - கோவை மாவட்டத்தில் தயார் நிலையில் 6,400 படுக்கைகள்

தொடர்ந்து பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் முதன்மைச் செயல் அலுவலர் அனுஷா ரவி பேசுகையில், "தற்போது செய்தித்துறைக்கான கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்துத் துறையின் பயிற்சி கல்லூரிகளை கோவை துவங்கி கோவை மாவட்டத்தை கல்விக்கான இலக்காக ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

செய்தியாளர் : சவுந்தர் மோகன் - கோவை

First published:

Tags: Coimbatore, Journalist, Local News, Senthil Balaji