முகப்பு /கோயம்புத்தூர் /

வண்ண வண்ண ஓவியங்களால் கலர்புல்-ஆக மாறிய கோவை லங்கா கார்னர்!

வண்ண வண்ண ஓவியங்களால் கலர்புல்-ஆக மாறிய கோவை லங்கா கார்னர்!

X
லங்கா

லங்கா கார்னர்

Coimbatore langa corner | வண்ணமயமாக காட்சியளிக்கும் கோவை லங்கா கார்னர் காண்போரின் கண்ணுக்கு விருந்தாகியுள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவை லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் கீழ் வரையப்பட்டுள்ளவண்ண வண்ண ஓவியங்கள் காண்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவை மாநகர அழகுபடுத்தும் ஏராளமான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இது தவிர ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குளக்கரைகள் மேம்படுத்தப்பட்டு பொலிவுபடுத்தப்பட்டுள்ளன. குளக்கரைகளில் பூங்காக்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே கோவை மாநகராட்சி நிர்வாகம் லங்கா கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் உட்புற சுற்றுச்சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்களை வரைந்துள்ளது.

கோவையில் லங்கா கார்னர் பகுதியான மையப் பகுதியாக உள்ளது. இங்கிருந்து திருச்சி சாலை, அவினாசி சாலை, டவுன்ஹால் உட்பட கோவையின் பல்வேறு இடங்களுக்கும் செல்ல முடியும்.

ALSO READ | சாலையில் வழிந்தோடும் நீரை சேமிக்கும் கோவை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்

இதனிடையே இங்கு மயில், யானைகள், குரங்கு, சிங்கம் மாட்டுவண்டி பயணம், வாழ்வியல் முறை குறித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் காண்போர் கண்ணை கவரும் வகையில் அமைந்துள்ளது.

கோவையில் மழை பெய்யும் பொழுதெல்லாம் லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் தேங்கி மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். நகரை அழகுபடுத்தும் மாநகராட்சி நிர்வாகம், உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும்எழுந்துள்ளது

First published:

Tags: Coimbatore, Local News