ஹோம் /கோயம்புத்தூர் /

ஸ்டார்ட் மியூசிக்.. "மினி டிஸ்கோவான கோவை வாலாங்குளம்" மிஸ் பண்ணாம பாருங்க மக்களே..!

ஸ்டார்ட் மியூசிக்.. "மினி டிஸ்கோவான கோவை வாலாங்குளம்" மிஸ் பண்ணாம பாருங்க மக்களே..!

X
வாலாங்குளம்

வாலாங்குளம் லேசர் ஷோ

Coimbatore Ukkadam-Valankulam Lake | கோவை மாவட்டம் வாலாங்குளம் ஏரியில் தினசரி லேசர் ஷோ மற்றும் நீரூற்று நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவை விழாவை முன்னிட்டு கோவை வாலாங்குளம் பகுதியில் நடைபெற்ற லேசர் ஷோபார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கோவை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை கோவை விழாவின் 15வது நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நாட்களில் மாவட்டம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

அந்த வகையில் உக்கடம் பகுதியில் உள்ள வாலங்குளத்தில் லேசர் விளக்குகள் காட்சி, இசைக்கு ஏற்பட நடனமாடும் நீரூற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார். இசைக்கு ஏற்ப பிரம்மாண்டமான முறையில் நடனமாடிய நீரூற்றும், வண்ண விளக்குகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

வரும் 8ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை இந்த லேசர் ஷோ வாலாங்குளத்தில் நடைபெறுகிறது.

First published:

Tags: Coimbatore, Lake, Local News