ஹோம் /கோயம்புத்தூர் /

300 ஆண்டு கால நடைமுறை.. ஒவ்வொர் ஆண்டும் நோய் நீங்க இரணிய நாடகம் நடத்தும் கோவை கிராமம்..

300 ஆண்டு கால நடைமுறை.. ஒவ்வொர் ஆண்டும் நோய் நீங்க இரணிய நாடகம் நடத்தும் கோவை கிராமம்..

X
இரணிய

இரணிய நாடகம்

Iraniyan Drama : கோயம்புத்தூரிலுள்ள கிராமத்தில் சுமார் 300-க்கும் ஆண்டுகளுக்கும் மேலாக இரணிய நாடகம் அரங்கேற்றம் நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிக்குப்பம் பாளையம் கிராமத்தில் கிராமிய தெரு கூத்தாக அறியப்பட்ட நாடகக்கலைகளை அழியாமல் தற்போது வரை ஒரு குழுவினர் பழமை மாறாமல் பாதுகாத்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இந்த கிராம மக்கள் கொத்து கொத்தாய் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அப்போது இரணிய நாடகம் என்ற நாடகத்தை நடத்தியதால் மக்கள் நோய் தொற்றில் இருந்து மீண்டும் வந்ததாக கூறப்படுகிறது. எனவே அப்போது முதல் தங்கள் கிராமத்தில் எந்த நோய் தொற்றும் ஏற்படாமல் இருக்க இந்த இரணிய நாடகத்தை ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நாடகத்தில் உள்ள வேடங்களில் தலைமுறை தலைமுறையாக உள்ளூர் இளைஞர்களே35 கதாபாத்திரங்களில் நடித்தும் பாடல்களை சொந்த குரலில் பாடியும் இசை கருவிகளை வாசித்தும் வருகின்றனர். அதன்படி இந்தாண்டு பொங்கல் விழாவை ஒட்டி இரவு முதல் காலை வரை விடிய விடிய இரணிய நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதில் இரணியன், பக்த பிரகலாதன், நரசிம்மர் உள்ளிட்ட காதாபத்திரங்களை தத்ரூபமாக நடித்து இளைஞர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

மேலும் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளிலும், வெளி ஊர்களில் இருந்தாலும் கூட இந்த நாடகத்தில் நடிக்கவும் நாடகத்தை காணவும் தவறாமல் இந்த கிராமத்திற்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு இந்த நாடகத்தை நடத்தி வருவதால் எந்த நோய் தொற்றும் தங்களை தாக்காமல் இருப்பதாக கூறும் கிராம மக்கள், காலத்திற்கும் இந்த கிராமிய கலைகளை அழியாமல் அரங்கேற்றுவோம் என தெரிவித்தனர்.

First published:

Tags: Coimbatore, Local News