Home /coimbatore /

கோவையில் புதிதாக 89 பேருக்கு கொரோனா

கோவையில் புதிதாக 89 பேருக்கு கொரோனா

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,37,622 ஆக அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கோவை மாவட்டத்தில் நேற்று மட்டும் 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் 2020-ம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் முதல் மூன்று அலைகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது பரவத் தொடங்கிய நான்காவது அலையால் பெரிய பாதிப்புகள் இல்லை. எனினும், சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

    கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில், நேற்று மட்டும் 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,37,622 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று சிகிச்சை வந்த 111 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 3,34,111 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தவிர 2,618 போ் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 675 போ் சிகிச்சையில் உள்ளனா்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி