Home /coimbatore /

கோவையில் புதிதாக 110 பேருக்கு கொரோனா- சிகிச்சையில் 911 பேர்

கோவையில் புதிதாக 110 பேருக்கு கொரோனா- சிகிச்சையில் 911 பேர்

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,944 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 142 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை மாவட்டத்தில் நேற்று மட்டும் 110 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

    கொரோனா மூன்றாவது அலை பாதிப்புக்குப் பிறகு தற்போது நான்காவது அலை இந்தியாவில் தொடங்கியது. இருப்பினும், முதல் மூன்று அலைகளைப் போல நான்காவது அலையின் தாக்கம் இல்லை. பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் கொரோனா தாக்கம் பெரியஅளவில் இல்லை. இருப்பினும், கடந்த ஒரு மாத காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவந்தது.

    கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில், நேற்று 110 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,944 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை வந்த 142 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 3,33,944 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தவிர 2,618 போ் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 911 போ் சிகிச்சைச் சையில் உள்ளனா்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி