Home /coimbatore /

கோவையில் சில்லென்று கொட்டும் அழகிய அருவிகள்... இவை சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்!

கோவையில் சில்லென்று கொட்டும் அழகிய அருவிகள்... இவை சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்!

கோயம்புத்தூர் அருவி

கோயம்புத்தூர் அருவி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அழகிய அருவிகளின் பட்டியலும் அவற்றின் சிறப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இவற்றை தவறாமல் பார்த்து குளித்து மகிழுங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
குரங்கு அருவி (Monkey Falls) :

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியார் அணைக்கு அருகில் உள்ளது இந்த குரங்கு அருவி. இது பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் இருக்கிறது. பொள்ளாச்சில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும், கோவையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. குளித்து மகிழ்வதற்கு ஏற்ற அழகான சூழலுடன் இந்த அருவி அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் இதனை அதிகம் விரும்புகின்றனர்.

கோவை குற்றாலம் (Kovai Kutralam) :

சிறுவாணி ஆற்றில் அமைந்துள்ள ஓர் அற்புதமான அருவி கோவை குற்றாலம். இது சிறுவாணி அருவி என்றும் அழைக்கப்படுகிறது. இது கோவைல் இருந்து 37 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனத்தில் அமைந்துள்ளது. இயற்கை அழகும் தெளிவான தண்ணீருக்கும் புகழ் பெற்றது இந்த அருவி.

கோயம்புத்தூரிலுள்ள அருவி


இந்த அருவி காருண்யா பல்கலைக்கழகத்தில் இருந்து 6 கி. மீ தொலைவில் உள்ளது. கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சாடிவயல் சோதனைச்சாவடியில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உயர்ந்த மலையின் இருந்து குற்றாலம் அருவியைப்போலவே ஆர்பரித்துக் கொட்டுவதால் இது கோவை குற்றாலம் என்று அழைக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இந்த அருவி அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு அனுமதி கிடையாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

சின்னக்கல்லார் அருவி (Chinnakallar Falls) :

சின்னக்கல்லார் அருவி (Chinnakallar Falls) கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்தில் உள்ள ஓர் அருவியாகும். இந்த அருவிக்கு செல்ல கரடு முரடான புதர்களை கடந்து குறுகிய பாதை வழியாக செல்ல வேண்டும். இந்த பகுதி இந்தியாவில் மூன்றாவது அதிக மழைப் பொழிவைப் பெறும் குளிர்ந்த இடமாக திகழ்கிறது.

கோயம்புத்தூரிலுள்ள அருவி


சின்னக்கல்லார் அருவியில் சரத்குமார் நடித்த ‘சூர்யவம்சம்’ படத்தின் பாடல் காட்சி எடுக்கப்பட்டது. இந்த அருவியில் சில்லென்று கொட்டும் தண்ணீரில் குளிப்பது அலாதியான சுகம். சுற்றுலா பயணிகள் இந்த சிறந்த அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க.

வைதேகி அருவி (Vaidehi water falls) :

கோவை மாவட்டத்திற்கு அழகு சேர்க்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அழகே வடிவான அருவிதான் இந்த வைதேகி அருவி. இங்குள்ள பாறைகள் மீது இயற்கையான சறுக்குகள் அமைந்துள்ளன.

தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி அருவி, கோவில் கண்டி அருவி என்று அழைக்கப்பட்ட இந்த அருவியானது, வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இருந்தது. அந்த படப்பிடிப்பிற்கு பிறகு இது வைதேகி அருவி என்றே அன்போடு அழைக்கப்படுகிறது.
Published by:Karthick S
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி