கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் விடுமுறை வேதாகம பள்ளி செயல்படுகிறது. விடுமுறை தினங்களில் மாணவர்களுக்கு நீதி, நல் ஒழுக்கம் மற்றும் சமூக பொறுப்பு, இயேசு கிறிஸ்து குறித்து கற்றுத்தருவதற்காக இந்த பள்ளி செயல்படுகிறது. விடுமுறை வேதாகம பள்ளி ஏப்ரல் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து பேசிய சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தின் ஆயர் ராஜேந்திர குமார், விடுமுறை தினங்களில் ஒவ்வொரு திருச்சபையிலும் விடுமுறை வேதாகம பள்ளி செயல்படுவது வழக்கம். அந்த வகையில் எங்களது திருச்சபையிலும் பள்ளி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில் 400க்கும் அதிகமான குழந்தைகள் இணைந்துள்ளனர்.
இந்த 10 நாட்கள் குழந்தைகளுக்கு வேதத்தில் இருந்து கதைகள், நீதி போதனைகள், நல் ஒழுக்கம், வாழ்வியல் முறை, பொது வாழ்வில் சிறப்பானவர்களாக வாழும் முறை, சமூக பொறுப்புணர்வு ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த பள்ளி 6 இயக்குநர்களின் கீழ், 30 ஆசிரியர்களுடன் செயல்படுகிறது. தினமும் காலை 9 மணி முதல் 1 மணி வரை குழந்தைகளுக்கு வகுப்பு நடைபெறுகிறது.
ALSO READ | கோவையில் வெளுத்து வாங்கும் கோடை மழை.. குஷியில் மக்கள்!
இங்கு 3 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த வகுப்பு கிறிஸ்தவத்தை மட்டும் மையப்படுத்துவது அல்ல. மற்றவர்களுக்கு பயன்படும் விதமாக நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல நல்ல விஷயங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்துவர்களுக்கு மட்டுமல்லாது மாற்று மதத்தவரும் இந்த பள்ளியில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News, Summer Vacation