ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை வ.உ.சி. பூங்காவுக்கான நுழைவுக்கட்டணம் உயர்வு..

கோவை வ.உ.சி. பூங்காவுக்கான நுழைவுக்கட்டணம் உயர்வு..

X
கோவை

கோவை வ.உ.சி பூங்கா

Coimbatore News : கோவை வ.உ.சி சிறுவர் பூங்காவுக்கான நுழைவுக்கட்டணத்தை உயர்த்தி மாநகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாநகராட்சியின் கவுன்சிலர்கள் கூட்டம் மாநகராட்சியின் விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன் மற்றும் கோவை மாநகராட்சியின் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் ஒன்று தான் வ.உ.சி பூங்காவுக்கான நுழைவுக்கட்டணம் குறித்த தீர்மானம். வ.உ.சி சிறுவர் பூங்காவிற்கு தற்போது சிறுவர்களுக்கு ரூ. 2 எனவும், பெரியவர்களுக்கு ரூ.3 எனவும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் முன் வைக்கப்பட்டு அந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்படி இனி வ.உ.சி பூங்காவில் சிறுவர்களுக்கு ரூ. 5 மற்றும் பெரியவர்களுக்கு ரூ.10 என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

வ.உ.சி பூங்காவின் அங்கமாக உயிரியல் பூங்காவும் செயல்பட்டு வந்தது. நேரு விளையாட்டு அரங்கு அருகில் உள்ள மாநகராட்சி வ.உ.சி உயிரியல் பூங்காவில் ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 400க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க : கோவையில் இருந்து 100 கி.மீ. சுற்றளவில் பார்க்க வேண்டிய பசுமையான சுற்றுலா தலங்கள்

தமிழகத்திலேயே உயிரியல் பூங்கா ஒன்றை மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்பு செய்து வந்தது இந்த பூங்கா மட்டுமே. கோவையில் மட்டுமே இந்த நடைமுறை இருந்த நிலையில் கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவை தமிழக வனத்துறையின் கீழ் உள்ள உயிரியல் பூங்கா ஆணையம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

கோவை மாநகராட்சி இதனை முறையாக பராமரிக்கவில்லை என்று கூறி வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்தது.

இதனால் கோவையின் பிரதான பொழுதுபோக்கு அம்சமான வ.உ.சி உயிரியல் பூங்கா மூடப்பட்டு, தற்போது சிறுவர் புங்கா மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்த சிறுவர் பூங்காவுக்கான நுழைவுக்கட்டணத்தை தான் தற்போது உயர்த்தியுள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஏற்கனவே சொத்துவரி உயர்வு, 24 மணி நேர குடிநீர் திட்டம் குறித்த அச்சம், மின் கட்டணம் உயர்வு என்று பல்வேறு பிரச்சனைகளால் கோவை மக்களும், தொழில் முனைவோரும் அல்லல்பட்டு வரும் சூழலில், பொழுதுபோக்கு அச்சத்திலும் மாநகராட்சி நிர்வாகம் கைவைத்துள்ளது கோவை மக்களை கொதிப்படையச்செய்துள்ளது.

செய்தியாளர் : சவுந்தர் மோகன் - கோவை

First published:

Tags: Coimbatore, Local News