Home /coimbatore /

கோவையில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

கோவையில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோவையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கோவை மாவட்டம் உக்கடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (வியாக்கிழமை) 18ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    கோவை உக்கடத்தில் நடைபெறும் மேம்பாலப் பணிகளுக்காக புதிதாக 110 கிலோ வாட் புதை வட கேபிள் மின் இணைப்பு பரிசோதனை பணிகள் மேற்கொள்ளப்பட
    உள்ளதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை உக்கடம் சுற்று வட்டார மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளா் ந.துரைசாமி தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், ஆசாத் நகா், வள்ளல் நகா், ஜி.எம்.நகா், லாரி பேட்டை, ஹவுஸிங் யூனிட், சாரமேடு பிரதான சாலை, அரபா காா்டன், ஜெ.ஜெ.காா்டன் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி