ஹோம் /கோயம்புத்தூர் /

பாட்டிலுக்கு 2 ரூபா மாமுல் கேக்குறாங்க.. கோவை டாஸ்மாக் பணியாளர்கள் குமுறல்..!

பாட்டிலுக்கு 2 ரூபா மாமுல் கேக்குறாங்க.. கோவை டாஸ்மாக் பணியாளர்கள் குமுறல்..!

X
டாஸ்மாக்

டாஸ்மாக்

Coimbatore News : நிர்வாகத்திற்கு சம்மந்தமே இல்லாத சிலர் பாட்டிலுக்கு 2 ரூபாய் கேட்டு மிரட்டுவதாக டாஸ்மாக் பணியாளர்கள் குமுறல்..!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் டாஸ்மாக்கில் விற்பனையாகும் பாட்டிலுக்கு 2 ரூபாய் மாமுல் தர வேண்டும் என மிரட்டுவதாக கூறி டாஸ்மாக் சங்க கூட்டுக்குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிற்கு மதுபானம் விற்பனை நடைபெறுகிறது. இதனிடையே டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத சில நபர்கள் பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் மாமூல் தரவேண்டும் என மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் கொதிப்படைந்த டாஸ்மாக் சங்க கூட்டுக்குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் கூறுகையில், நிர்வாகத்திற்கு சம்மந்தமே இல்லாத சிலர் தங்களிடம் பாட்டிலுக்கு 2 ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளதாகவும் கூறினர். மேலும், டாஸ்மாக் பரிவர்த்தனைகள் அவர்களுக்கு பகிரப்படுவதாகவும், உடனடியாக இந்த பிரச்சனையில் ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

First published:

Tags: Coimbatore, Local News, Tamil News