Home /coimbatore /

கோவையில் 23, 24-ம் தேதிகளில் எஸ்.ஐ பணிக்கான உடற்தகுதித் தேர்வு

கோவையில் 23, 24-ம் தேதிகளில் எஸ்.ஐ பணிக்கான உடற்தகுதித் தேர்வு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோவை காவலா் பயிற்சிப் பள்ளி  மைதானத்தில் காவல் உதவி ஆய்வாளா் (எஸ்ஐ)  பணிக்கு உடல் தகுதித் தோ்வு  வரும் 23, 24ம் தேதிகளில் நடக்கிறது என்று கோவை மாவட்ட தோ்வுதேர்  மைய துணைக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு தகுதி தேர்வு 23, 24ம் தேதியில் நடைபெறவுள்ளது.

    கோயம்புத்தூர் காவலா் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு உடல் தகுதித் தோ்வு வரும் 23, 24ம் தேதிகளில் நடைபெறுகிறது என்று கோவை மாவட்ட தோ்வு மைய துணைக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

    கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு மற்றும் உடல் திறனறித் தோ்வு நடக்கிறது. இந்த தேர்வானது வரும் ஆகஸ்ட் 23மற்றும் 24ம் தேதிகளில் நடக்கிறது.

    காலை 6.30 மணிக்கு தகுதித் தோ்வின் முதல் அணியும், காலை 7.30
    மணிக்கு இரண்டாம் அணியும், காலை 8.30 மணிக்கு மூன்றாம் அணியும் காவல் துறை ஒதுக்கீடுபடி தேர்வர்கள் கலந்து கொள்கின்றனர்.

    ஏற்கனவே இதற்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் விண்ணப்பத்தாரா்களுக்கு
    அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் பெறப்படாதவா்கள் இணையதள முகவரியில் அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பதாரா்கள் தோ்வாணையத்துக்கு விண்ணப்பம் அளிக்கும்போது, அனைத்து அசல் சான்றிதழ்களையும் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி