ஹோம் /கோயம்புத்தூர் /

தேசிய அளவிலான குதிரைப்பந்தய போட்டியில் கோவை மாணவர்கள் வெற்றி..

தேசிய அளவிலான குதிரைப்பந்தய போட்டியில் கோவை மாணவர்கள் வெற்றி..

குதிரைப்பந்தய போட்டியில் வெற்றிபெற்ற கோவை மாணவர்கள்

குதிரைப்பந்தய போட்டியில் வெற்றிபெற்ற கோவை மாணவர்கள்

Coimbatore News : தேசிய அளவிலான குதிரைப்பந்தய போட்டியில் கோவை மாணவர்கள் வெற்றி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

தேசிய ஜூனியர் குதிரைப்பந்தய போட்டியில் கோவை மாணவர்கள் 8 பேர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் உள்ள குதிரையேற்ற அகாடமியில், அகில இந்திய அளவிலான தேசிய ஜூனியர் குதிரையேற்ற பந்தயப்போட்டி நடைபெற்றது. இதில் தேசிய அளவில் 400 பேர் பங்கேற்றனர். 450 குதிரைகள் பங்கேற்றன. 10 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.

இதில் கோவையில் இருந்து 10 குதிரைகளும், திவ்யேஷ்ராம், வாணியா கண்ணன், பிரதீப் கிருஷ்ணா, விக்னேஷ் கிருஷ்ணா, ஹர்ஷித், ஆரதனா ஆனந்த், ஆதவ் கந்தசாமி, ராகுல் ராஜேஷ் ஆகிய 8 மாணவர்களும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : கோவையில் இருந்து 100 கி.மீ. சுற்றளவில் பார்க்க வேண்டிய பசுமையான சுற்றுலா தலங்கள்

அக்குமுலேட் என்ற பிரிவில், ஆரதனா ஆனந்த் தேசிய அளவில் நான்காம் இடம் பெற்றுள்ளார். டாப்ஸ்கோர் என்ற பிரிவில்ராகுல் நான்காம் இடம் பெற்றுள்ளார். அகில இந்திய அளவிலான சிறந்த குதிரையேற்ற பந்தய வீரர் பட்டத்தை திவ்யேஷ்ராம் பெற்றுள்ளார்.

இதில், தனித்திறன்போட்டியில் திவ்யேஷ்ராம் தங்கம் வென்றார். குழுவிற்கான தங்கத்தை ஆதவ் கந்தசாமி வென்றார். ஆரதனா ஆனந்த், திவ்யேஷ்ராம், விக்னேஷ் கிருஷ்ணா, ஹர்ஷித் ஆகியோர் குழு போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

செய்தியாளர் : சவுந்தர் மோகன் - கோவை

First published:

Tags: Coimbatore, Local News