முகப்பு /கோயம்புத்தூர் /

இந்தியாவிலேயே ஹைட்ரஜனால் இயங்கும் முதல் படகு.. கோவை மாணவர்கள் அசத்தல்!

இந்தியாவிலேயே ஹைட்ரஜனால் இயங்கும் முதல் படகு.. கோவை மாணவர்கள் அசத்தல்!

X
ஹைட்ரஜன்

ஹைட்ரஜன் படகு

Coimbatore hydrogen boats | கோவையை சேர்ந்த மாணவர்கள் ஹட்ரஜன் மூலம் இயங்கும் படகை தயாரித்து அசத்தியுள்ளனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் டீம் சி சக்தி என்ற தலைப்பில் புதிதாக படகுகளை உருவாக்கி வருகின்றனர்.

இதனிடையே கல்லூரியில் வெவ்வேறு துறைகளில் பயிலும் 10 மாணவர்கள் இணைந்து ஐரோப்பாவில் நடைபெறும் உலக அளவிலான படகு சவால் போட்டியில் கலந்து கொள்கின்றனர். இதற்காக மாணவர்கள் ஹைட்ரஜன் மூலமாக இயங்கும் படகை தயாரித்துள்ளனர்.

இதுவரை ஹைட்ரஜனால் இயங்கும் படகு இந்தியாவில் தயாரிக்கப்படாத நிலையில், இந்தியாவிலேயே ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் படகு என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த படகை கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் திறந்து வைத்தார். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், "ஐரோப்பா நாட்டில் உள்ள மொனாக்கோ பகுதியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளோம்.

கடந்த ஆண்டு முதல் இந்திய பங்கேற்பாளராக குமரகுரு கல்லூரி சார்பாக கலந்து கொண்டு வருகிறோம். இதற்காக கடந்த ஆண்டை விட, பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த ஹைட்ரஜன் படகை வடிவமைத்து அதனை உருவாக்கி உள்ளோம். 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த படகு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக பல நிறுவனங்கள் எங்களுக்கு உதவியுள்ளன" என்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Boats, Coimbatore, Local News