முகப்பு /கோயம்புத்தூர் /

இந்த நோய் வந்தால் கண் பார்வை அவ்ளோதான்..! பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை மாணவர்கள்..!

இந்த நோய் வந்தால் கண் பார்வை அவ்ளோதான்..! பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை மாணவர்கள்..!

X
இந்த

இந்த நோய் வந்தால் கண் பார்வை அவ்ளோதான்

Coimbatore News | கண் அழுத்த நோய் மற்றும் அதற்கான சிகிச்சை குறித்து கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கண்ணில் அதிகரிக்கும் அழுத்தத்தின் காரணமாக பார்வைத்திறன் படிப்படியாக குறைந்து பார்வையிழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்ட நோய் குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டால் மீண்டும் இழந்த பார்வையை பெற முடியாது. 'சைலண்ட் கில்லர்' என்று மருத்துவர்கள் வரையறுக்கும் இத்தகைய நோய் குறித்து பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை.

இதனால் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை உலக குளுக்கோமா வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் கண் அழுத்த நோய் குறித்த கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கண் அழுத்த நோய் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை மாணவர்கள்

கோவை சரவணம்பட்டி சோதனைச்சாவடி அருகே கண் அழுத்த நோய் என்பது என்ன? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதற்கான சிகிச்சை முறைகள் என்ன? என்பது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வாகனங்களில் வந்து சிக்னலில் நின்ற பொதுமக்கள் மத்தியில் கண் அழுத்த நோய் குறித்து எடுத்துரைத்து இது தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Coimbatore, Local News