ஹோம் /கோயம்புத்தூர் /

தேசிய அளவிலான தடகள போட்டி : கோவை மாணவி  தங்கம் வென்று அசத்தல்

தேசிய அளவிலான தடகள போட்டி : கோவை மாணவி  தங்கம் வென்று அசத்தல்

தேசிய

தேசிய அளவிலான தடகள போட்டியில்  தங்கம் வென்ற கோவை மாணவி

Coimbatore news : சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்காக பதக்கங்களை குவிக்கும் லட்சியத்தோடு பயணிப்பதாக மாணவி ஒலிம்பா தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

சத்திஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில், கோவை சேர்ந்த கல்லூரி மாணவி இரண்டு பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார்.

அத்லெடிக் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில்,23 வயதுக்குட்பட்டோருக்கானதேசிய அளவிலான தடகள போட்டி சத்திஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் நடந்தது. இந்த போட்டிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியிட்டனர்.

100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் போட்டிகள், நடையோட்டம், தடையோட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தடகள போட்டிகள் நடைபெற்றன.

இதில் கோவை பீளமேடு பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியில் மூன்றாமாண்டு மாணவி ஒலிம்பா ஸ்டெபி போட்டியிட்டார். 400 மீட்டர் ஓட்டப்போட்டியிலும், 400 மீட்டர் தடையோட்ட போட்டியிலும் பங்கேற்றார். இதில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், தடையோட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார் ஒலிம்பா.

Also Read:  கோவையில் உங்களின் மனதை மயக்கும் அழகான சுற்றுலா தலங்கள்.! கண்டிப்பா ஒரு விசிட் அடிங்க

தனது 12 வயதில் இருந்து தடகளப் போட்டிகளில் ஆர்வம் செலுத்தி கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் ஸ்டெபி, 10ம் வகுப்பிலேயே மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை குவித்துள்ளார். அடுத்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்காகபதக்கங்களை குவிக்கும் லட்சியத்தோடு பயணிப்பதாக மாணவி ஒலிம்பா தெரிவித்தார்

Published by:Ramprasath H
First published:

Tags: Athlete, Coimbatore, Local News