முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / பெட்ரோல், டீசல் தேவையில்லை... கொளுத்தும் வெயிலே போதும்! - கோவையில் மாஸ் காட்டிய சோலார் கார்கள்!

பெட்ரோல், டீசல் தேவையில்லை... கொளுத்தும் வெயிலே போதும்! - கோவையில் மாஸ் காட்டிய சோலார் கார்கள்!

சோலார் கார் பந்தயம்

சோலார் கார் பந்தயம்

Coimbatore solar car race | தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் பெட்ரோல் டீசல் இல்லாத புதிய கார்களை உருவாக்கியுள்ளனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சோலார் கார் பந்தயத்தில் சாலை, கரடு முரடான பாதை என ஆர்வமுடன் போட்டியாளர்கள் காரை இயக்கினர்.

சோலார் வாகனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியின் ஒருங்கிணைப்பில் தேசிய அளவிலான சோலார் மற்றும் எலக்ட்ரிக்கல் கார்பந்தயம் நடைபெற்றது.

கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை சார்பில் தேசிய அளவிலான சோலார் மற்றும் எலக்ட்ரிக்கல் கார் பந்தயம் நடைபெற்றது.சுற்று சூழலை பாதுகாக்கும் விதமாகவும், சோலார் வாகனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த கார் பந்தயம் நடைபெற்றது.

இதில், தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 30 அணிகளைச் சார்ந்த 700 வீரர்கள் பங்கேற்றனர். பொறியியல் துறையின் கல்லூரி மாணவ மாணவிகளால் உருவாக்கப்பட்ட கார், முழுக்க முழுக்க பெட்ரோல், டீசல் இல்லாத சூரிய மின்சக்தி ஆற்றலால் இயக்கபட்டது. மேலும் இந்த கார் பந்தயம் ஆனது  சாலை, மண் சாலை, கரடுமுரடான பாதை என சவால் மிக்க போட்டியாக நடத்தப்பட்ட இதில் போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசை மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வித்யா வர்தினி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் குழுவினர் பெற்றுள்ளனர். இரண்டாம் பரிசைஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் குழுவினர் பெற்றுள்ளனர். மூன்றாம் பரிசைஇந்துஸ்தான் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் குழுவினர் பெற்றுள்ளனர்.

தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் பெட்ரோல் டீசல் இல்லாத புதிய கார்களை உருவாக்கியுள்ளதாகவும், மேலும் சோலார் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பந்தயம் நடைபெற்றுள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

top videos

    செய்தியாளர்: ஜெரால்ட், கோவை.

    First published:

    Tags: Car, Coimbatore, Local News