முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவை ஒப்பணக்கார வீதியில் திடீரென பற்றி எரிந்த தீ.. பதறி ஓடிய மக்கள்!

கோவை ஒப்பணக்கார வீதியில் திடீரென பற்றி எரிந்த தீ.. பதறி ஓடிய மக்கள்!

தீ விபத்து

தீ விபத்து

Coimbatore fire accident | பொதுமக்கள் அதிகம் நடமாடும் ஒப்பணக்கார வீதியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த திவாக் பிரசாத் பாரிக்,  ஒப்பணக்கார வீதியில் விஷ்ணு டிரேடர்ஸ் என்ற பெயரில் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் காலணிகள் விற்கும் கடை மற்றும் மொத்த வியாபாரத்திற்கான குடோன் ஆகியவற்றை நடத்தி வருகின்றார்.

நேற்று இரவு இந்த கடை மற்றும் குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்த்து. தீ மளமளவென வேகமாக பரவி கடையில் இருந்த பொருட்கள் அனைத்திலும் பரவியது. 3 மாடி கொண்ட கட்டிட்டம் முழுவதும் தீ பிடித்து எரிந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு  சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பத்துக்கும்  மேற்பட்ட தீயணைப்பு துறையினர், அடுத்தடுத்து நான்கு லாரிகளில் தண்ணீரைக் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீண்ட போராட்டத்திற்கு பின்பு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக குடோன் அருகில் இருந்த சில கடைகளிலும் தீ பரவியது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு அவற்றையும் அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடை மற்றும் குடோனில்  வைக்கப்பட்டு இருந்த  லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: சு.குருசாமி, கோவை.

top videos
    First published:

    Tags: Coimbatore, Fire accident, Local News