முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை-சேலம் பயணிகள் ரயில் இந்த மாதம் முழுவதும் ரத்து

கோவை-சேலம் பயணிகள் ரயில் இந்த மாதம் முழுவதும் ரத்து

கோவை-சேலம் ரயில் ரத்து

கோவை-சேலம் ரயில் ரத்து

Passenger Train Canceled | கோவை-சேலம் இடையிலான பயணிகள் ரயில் பிப்ரவரி மாதம் முழுவதும் இரு மார்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

சேலம்-கோவை இடையிலான பயணிகள் (MEMU) ரயில், ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக, ஏற்கெனவே கடந்த சில மாதங்களாக ரத்து செய்யப்பட்ட நிலையில்,  இன்று (பிப்ரவரி 1 ஆம் தேதி) தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ஜங்ஷன்- கோவை ஜங்ஷன் இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் (MEMU) ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், சேலம் - கோவை இடையிலான ரயில் பாதையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக, சேலம் - கோவை பயணிகள் (MEMU ) ரயில் ரத்து செய்யப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருப்பூர்-கோவை இடையிலான ரயில்வே வழித்தடத்தில், இருகூர் மற்றும் சூலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், பல்வேறு ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவது அவ்வப்போது நிறுத்தப்பட்டன. சில ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.

Must Read : திருநெல்வேலி பகுதியில் உள்ள சிறப்புவாய்ந்த நவகைலாய கோவில்கள் பற்றி தெரியுமா?

இந்நிலையில், சேலம்-கோவை பயணிகள் (MEMU) ரயில் (வண்டி எண்-06803) மற்றும், கோவை-சேலம் பயணிகள் (MEMU) ரயில் (வண்டி எண்-06802) ஆகியவற்றின் இயக்கம்,  இன்று ( பிப்ரவரி 1) தொடங்கி மாதத்தின் இறுதி நாளான 28-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News, Train