கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் உள்ளது. ஸ்ரீ நாகசாய் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
தென்னிந்தியாவின் முதல் சாய்பாபா கோவிலான இக்கோவில் கடந்த 1939-ம் ஆண்டு நரசிம்மசுவாமிஜி மற்றும் வரதராஜா அய்யா ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது.
இந்த கோவில் தென்னிந்தியாவின் சீரடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் இருப்பதாலேயே அப்பகுதி சாய்பாபா காலனி என்ற காரணப்பெயரையும் பெற்றது.
ஆரம்ப காலகட்டத்தில் இக்கோவில் பாபாவின் திருவுருவப் படத்தை வைத்து பூஜித்து வந்தனர். கடந்த 1946ம் ஆண்டு இந்த கோவில் ஆகம விதிகளின் படி கட்டப்பட்டு முதல் முறையாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தினமும் காலை 5.15 மதியம் 12.30 மாலை 6.15 இரவு 8.30 மணி என நான்கு கால பூஜைகளும் இருவேளைகளிலும் அபிஷேகமும், வியாழக்கிழமை தோறும் மூன்று வேளை அபிஷேக ஆராதனையும் நடைபெறுகிறது.
மதவேறுபாடுகளின்றி அனைத்து மதத்தவர்களும் வழிபடும் இத்தலத்தில் இந்துக்கள் திருவிளக்கு ஏற்றியும், கிறித்துவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும் இந்த கோவிலில் வழிபாடு நடத்துகின்றனர்.
ஆசியாவிலேயே சாய்பாபாவிற்காக தங்கத்தேர் இந்த கோவிலில் தான் உள்ளது. வியாழக்கிழமை தோறும் தங்கத்தேரில் பவனி வந்து சாய்பாபா பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இக்கோவிலில் பாபா தரிசன தினம், குரு பூர்ணிமா, ராமநவமி, விஜயதசமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் ஹோமம், சிறப்பு பூஜைகள் நடத்துப்பட்டு வருகிறது
இதனிடையே இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்றது. கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதையொட்டி வரும் 27ம் தேதி மாலை 5 மணிக்கு தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 28ம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற உள்ளன.
குடியரசு தினத்தை ஒட்டி கோவை ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News