முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / ரேக்ளா வண்டியில் டூவிலர் மோதி விபத்து.. கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த பரிதாபம்

ரேக்ளா வண்டியில் டூவிலர் மோதி விபத்து.. கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த பரிதாபம்

கோயம்புத்தூ விபத்து

கோயம்புத்தூ விபத்து

ரேக்ளா வண்டி யார் ஓட்டி வந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சி அடிப்படையில்  போலீசார் விசாரணை.

  • Last Updated :
  • Coimbatore, India

ரேக்ளா வண்டி மாடு மிரண்டு இருசக்கர வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பிரிவு அருகே ரேக்ளா வண்டி ஓட்டி வரும்போது மாடு மிரண்டு எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி விபத்தில் சிக்கினர். இதில் குப்பேபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (32) என்பவரது மனைவி புவனேஸ்வரி (25) சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரேக்ளா வண்டி யார் ஓட்டி வந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சி அடிப்படையில்  தொண்டாமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளிவந்து காண்போரை இதயம் கனக்க செய்கின்றது.

செய்தியாளர்: சுரேஷ் (தொண்டாமுத்தூர்)

top videos
    First published:

    Tags: Coimbatore, Tamil News