ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் நேற்று மட்டும் புதிதாக 92 பேருக்கு கொரோனா

கோவையில் நேற்று மட்டும் புதிதாக 92 பேருக்கு கொரோனா

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோவை மாவட்டத்திலும் நேற்று மட்டும் 92 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் கொரோனா நான்காவது அலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. ஆனால், மற்ற மூன்று அலைகளைப் போல பாதிப்பு தீவிரமாக இல்லை. கொரோனா பரவும் வீதம் கட்டுக்குள்ளேயே இருந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாக இருந்தது.

  கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில், நேற்று மட்டும் 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,37,531 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை வந்த 123 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  மாவட்டத்தில் இதுவரை 3,34,128 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தவிர 2,618 போ் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 695 போ் சிகிச்சையில் உள்ளனா்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Corona, Local News