சிகிச்சைக்காக நாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, நமது உடலுக்கு தேவையான மருந்துகள் நரம்பு வழியாக நமது உடலில் ஏற்றப்படுகிறது. இப்படியான மருந்துகள் நரம்பு வழியாக செலுத்தும் நேரத்தில், முறையாக கண்காணிக்காமல் பாட்டிலில் உள்ள மருந்து தீர்ந்து விட்டால் உடலில் உள்ள ரத்தம் நரம்பு வழியாக வெளியேறும் அபாயம் உள்ளது.
இதனிடையே, நரம்பு வலி செலுத்தும் மருத்துவ திரவங்களை கண்காணிப்பதற்கான பயோசிம் கருவிகளை ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். பயோ மெடிக்கல் இஞ்சினியரிங் படிக்கும் மாணவர்கள் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி பாட்டிலில் உள்ள மருந்து தீரும் நேரத்தில் பீப் ஒலி எழுப்புவதோடு, பணியில் இருக்கும் செவிலியர்களின் செல்போனுக்கும் விழிப்பூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் திவ்யலட்சுமி கூறுகையில், "எங்கள் கல்லூரியில் அமைந்துள்ள கூட்டு கண்டுபிடிப்பு மையம் மற்றும் இன்குபேஷன் நிறுவனமான டெக்ஸோ சொல்யூஷன்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த ஸ்மார்ட் பயோ சிம் என்ற புதிய கருவியை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மருத்துவமனைகளில் உள்ள நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் ஊழியர்கள், நோயாளிகளுக்கு விரைந்து சேவை செய்வதற்கு பயனுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் பயோ சிம் பல்வேறு வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு நரம்பு வழி செலுத்தும் குளுக்கோஸ், இரத்தம், மருந்து போன்ற திரவங்களை வழங்குவதைத் தொடர்ந்து கண்காணிக்கும் ஒரு ஸ்மார்ட் கண்காணிப்பு அமைப்பாகும்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News