முகப்பு /கோயம்புத்தூர் /

சிங்காநல்லூர் கால்வாயை தூர்வார கோவை மக்கள் கோரிக்கை!

சிங்காநல்லூர் கால்வாயை தூர்வார கோவை மக்கள் கோரிக்கை!

X
சிங்காநல்லூர்

சிங்காநல்லூர் கால்வாயை தூர்வார கோவை மக்கள் கோரிக்கை

Coimbatore News | கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கால்வாய் பாலம் முறையாக தூர்வாரப்படாமல் இருப்பதால் 30 நிமிடம் பெய்த மழைக்கே வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாநகராட்சி வார்டு எண் 59க்கு உட்பட்ட சிங்காநல்லூரில் கிருஷ்ணம்ம நாயக்கர் வீதி அமைந்துள்ளது. வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் இங்கு அமைந்துள்ள கால்வாய் பாலம் வழியாகச் சிங்காநல்லூர் குளத்தை சென்றடைகிறது. இதனிடையே கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழைக்கே இந்த கால்வாய் பாலம் முழுவதும் நிரம்பியது.

இதனால் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவு நீர் புகுந்தது. பொதுமக்கள் பயன்படுத்தக் கூடிய தண்ணீர் தொட்டிகளில் கழிவுநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைபெய்யும் பொழுதெல்லாம் இந்த பிரச்சனையை சந்தித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் போதெல்லாம் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தால் அப்போது மட்டும் பெயரளவில் சுத்தப்படுத்திவிட்டு செல்வதாகவும், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் உடனடியாக கால்வாய் பாலத்தை தூர்வாரி சுத்தப்படுத்துவதோடு, வீடுகள் அருகே இருக்கும் சாக்கடைகளையும் வாரந்தோறும் சுத்தப்படுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    First published:

    Tags: Coimbatore, Local News