ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் வனப்பகுதிக்குள் அட்டகாசமாக ஒரு குகைக்கோவில்..! குளித்து மகிழ சிற்றருவி.. கண்டிப்பா விசிட் அடிங்க

கோவையில் வனப்பகுதிக்குள் அட்டகாசமாக ஒரு குகைக்கோவில்..! குளித்து மகிழ சிற்றருவி.. கண்டிப்பா விசிட் அடிங்க

X
பொன்னூத்து

பொன்னூத்து அம்மன் கோவில்

Coimbatore News: அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து மூல தெய்வமான பொன்னூத்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள பொன்னூத்து அம்மன் கோவில் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

கோவை மாவட்டத்தில் ஏராளமான மலைக்கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பொன்னூத்து அம்மன் கோவில். பன்னீர்மடையை அடுத்த வரப்பாளையம் கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது இந்த கோவில்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து மூல தெய்வமான பொன்னூத்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். ஒவ்வொரு அமாவாசை நாளின் போதும் இந்த கோவிலில் விஷேச பூஜைகள் நடைபெறுகின்றன. அன்று அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த கோவிலின் அடிவாரத்தில் வாகனங்களை நிறுத்துவிட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மண் பாதையில் நடந்து சென்று கோவிலை அடையலாம். இங்கேயே சிவன், விநாயகர், பாலமுருகன் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகளும் அமைந்துள்ளன. பொன்னூத்து அம்மன் சன்னதி குகைக்குள் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இருவர் மட்டுமே இந்த சன்னதிக்குள் செல்லமுடியும். இந்த குகைக்கோவிலுக்குள் சென்று வழிபட ஆண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

பெண்கள் குகைக்கு வெளியில் இருந்து அம்மனை வழிபடலாம். குகைக்கு அருகிலேயே ஒரு சிற்றருவி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் மட்டும் இந்த அருவியில் நீர் வரத்து இருக்கும். இந்த காலகட்டத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் கோவில் அமைந்துள்ளதால் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.

கடந்த சில மாதங்களாக, பொன்னூத்து அம்மன் கோவில் மலையைச் சுற்றியுள்ள, வரப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், தாளியூர், சோமையனூர், காளையனூர், சின்ன தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் வனத்துறை பணியாளர்கள் இங்கு 24மணி நேரமும் பணியில் உள்ளனர்.

கோவிலுக்கு செல்லும் வழியை காட்டுகிறது கூகுள் மேப்

இயற்கையை ரசித்தபடி ஆன்மிகப்பயணம் மேற்கொள்ள நினைப்பவர்கள் ஒரு குட்டி ட்ரிப்-ஆக கோவிலுக்குசென்றுவரலாம்.

First published:

Tags: Coimbatore, Local News, Tamil News