Home /coimbatore /

பொள்ளாச்சி-பழனி ரயில் வழித் தடத்தில் அதிவேகத்தில் பயணிக்கலாம்

பொள்ளாச்சி-பழனி ரயில் வழித் தடத்தில் அதிவேகத்தில் பயணிக்கலாம்

பொள்ளாச்சி-பழனி 

பொள்ளாச்சி-பழனி 

Coimbatore Pollachi-Palani Railway Line Train | பொள்ளாச்சி-பழனி இடையேயான ரயில் தடத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pollachi, India
பொள்ளாச்சி-பழனி இடையே ரயில் தடத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து ரயில் 100 கி. மீ வேகத்தில் இயக்கப்படும்.

ரயிலின் வேகம் அதிகரிப்பு திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு மற்றும் போத்தனூர் இடையேயான மீட்டர் கேஜ் ரயில்பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி-பழனி வழித்தடத்தில் திருச்செந்தூர், சென்னை, திருவனந்தபுரம், மதுரைக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க; வால்பாறையில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்- அச்சத்தில் பொதுமக்கள்

இதற்கிடையில், இந்த ரயில் பாதையில் மின் மயமாக்கல் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி-பழனி இடையேயான வழித்தடத்தில் ரயில்கள் 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் ரயிலின் வேகத்தை அதிகரிக்க ரயில் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது தண்டவாளத்தின் அதிர்வுகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது ரயிலின் வேகத்தை அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “பொள்ளாச்சி-பழனி வழித்தடத்தில் தற்போது 70 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ரயிலின் வேகத்தை அதிகரிப்பது குறித்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தற்போது ரயிலின் வேகம் 100 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயண நேரம் குறையும். மேலும் அதிவிரைவு ரயில்களை இயக்குவதற்கு முடியும்” என்றனர்.

பொள்ளாச்சி-பாலக்காடு இடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால் பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்திலும் சோதனை ஓட்டம் நடத்தி ரயிலின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொள்ளாச்சி - பழனி வழி தடத்தில் இனிமேல் 100 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும் என்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News, Pollachi

அடுத்த செய்தி