Home /coimbatore /

விநாயகர் சதுர்த்தி விழாவில் மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்பட்டால் கடும் நடவடிக்கை- கோவை கமிஷனர் எச்சரிக்கை

விநாயகர் சதுர்த்தி விழாவில் மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்பட்டால் கடும் நடவடிக்கை- கோவை கமிஷனர் எச்சரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக கோவை மாநகர ஆணையர் கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுகப்படும் என்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

    கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்திக்கு 500 விநாயகர் சிலைகளுக்கு மாநகர போலீசார் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் சார்பில் 1,500 போலீசார் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இன்று முதலே பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்படுகிறது. மாநகரில் உள்ள 11 சோதனைச் சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிர படுத்தியுள்ளனர். ஊர்வலம் முதல் விநாயகர் சதுர்த்தி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கேமரா மற்றும் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் அமைதியாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடுமையாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

    நேற்று முன்தினம் சிங்காநல்லூர் பகுதியில் திருநங்கைகள் வழிப்பறி செய்ததாக வந்த புகார் மீது 6 திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பணியில் இருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்கான வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருநங்கைகள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மாநகர போலீசார் செயல்பட்டு வருகின்றனர். திருநங்கைகள் தொடர்பான பல புகார்கள் வந்ததின் அடிப்படையில் 2 முறை கூட்டம் நடத்தி ஆலோசனைகள் வழங்கினோம். திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். இப்படி அறிவுரைகள் ஆலோ சனைகள் வழங்கியும் மீறி செயல்படும் திருநங்கைகள் மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி