Home /coimbatore /

பிரதமரின் நிதியைப் பெற ஆதார்-மொபைல் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்- விவசாயிகள் இதை செய்யுங்க

பிரதமரின் நிதியைப் பெற ஆதார்-மொபைல் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்- விவசாயிகள் இதை செய்யுங்க

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விவசாயிகள் பிரதமரின் நிதியைப் பெற ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை நாளைக்குள் இணைக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    விவசாயிகள் 12 வது தவணையாக கிசான் நிதியை தொடர்ந்து பெற ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும். மேலும் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள் (31ம் தேதி) என்று பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் பாரத பிரதமரின் கிசான் நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணம் ரூ.2,000 வீதம் 3 தவணையாக ஆண்டுக்கு 6,000 ரூபாய்  செலுத்தப்படுகிறது.

    இந்நிலையில், கோவை மாவட்டத்தில், 68,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுகின்றனர். இதில், 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், பி.எம் கிசான் கணக்கினை ஆதார் எண்ணுடன் இணைக்காமல் உள்ளனர்.

    12 ஆவது தவணையாக ரூ. 2,000 பெறுவதற்கு பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்டட்
    பி.எம் கிசான் திட்ட ஆதாா் எண்ணுடன் தொலைபேசி எண்ணை தவறாமல் இணைக்க வேண்டும்.

    இதில், யாரேனும் தொலைபேசி எண்ணை மாற்றம் செய்திருந்தால், தற்போது பயன்பாட்டில் உள்ள தொலைபேசி எண்ணை ஆதாா் எண்ணுடன் இணைக்க அருகிலுள்ள அஞ்சல்
    நிலையத்தை அணுகி இணைத்துக் கொள்ளலாம்.

    விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையங்கள், சேவை மையம் மற்றும் https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யலாம். பி.எம் கிசான் கணக்கினை ஆதார் எண்ணுடன் இணைக்க நாளை, 31ம் தேதி இறுதி நாளாகும். அனைத்து விவசாயிகளும் இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்

    அதன் பின்னா் இ.கே.ஒய்.சி செய்து கொள்ள 48 மணி நேரத்துக்குள் அருகில் உள்ள இ - சேவை மையத்தை அணுகி பி.எம் கிசான் வலைதளத்தில் தங்களது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து பின்னா் பெறப்படும் ஓ.டி.பி எண்ணை பதிவேற்றம் செய்து தங்களது பி.எம் கிசான் திட்ட கணக்கு எண்ணுக்கு 12 ஆவது தவணை நிதி பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மேலும், விவசாயிகள் தங்களது பட்டா, சிட்டா, ஆதாா் விவரங்களை கட்டாயமாக தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரிடம் கொடுத்து உழவா் அலுவலா் தொடா்பு திட்ட செயலி மூலம் நில ஆவணங்களைச் சரிபாா்த்து உறுதி செய்து கொள்ளலாம் என பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வேளாண் உதவி இயக்குனர் மீனாம்பிகை தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி