முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை மாவட்டத்தின் 'நச்' புகைப்படங்கள் இருக்கா? அப்போ உடனே இந்த போட்டியில் கலந்துக்கோங்க!

கோவை மாவட்டத்தின் 'நச்' புகைப்படங்கள் இருக்கா? அப்போ உடனே இந்த போட்டியில் கலந்துக்கோங்க!

புகைப்பட போட்டி

புகைப்பட போட்டி

Coimbatore Photo contest | போட்டியாளர்கள் தங்களது புகைப்படங்களை jpg வடிவில் (jpg format) 25ம் தேதி இரவு 10 மணிக்குள் அனுப்பவேண்டும்.

  • Last Updated :
  • Coimbatore, India

வால்பாறை கோடை விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தின் இயற்கை, பண்பாடு, வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்களைக் கொண்டு ஆன்லைன் புகைப்படப் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

வால்பாறை கோடை விழா 2023 முன்னிட்டு ஆன்லைன் புகைப்படப் போட்டி நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வால்பாறை கோடை விழா 2023 வருகின்ற 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இவ்விழாவின் ஒரு பகுதியாக ஆன்லைன் புகைப்படப் போட்டி நடைபெறவுள்ளது. புகைப்படங்களின் கருத்து (Theme) பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்:

1. கோயம்புத்தூர் மாவட்டத்தின் தாவரங்கள்/விலங்குகள்,

2. கோயம்புத்தூர் மாவட்டத்தின் கலை/பண்பாடு/விழாக்கள்

3. கோயம்புத்தூர் மாவட்டத்தின் இயற்கைக் காட்சிகள்/வரலாற்றுச் சின்னங்கள்

போட்டியாளர்கள் தங்களது புகைப்படங்களை jpg வடிவில் (jpg format) 25ம் தேதி இரவு 10 மணிக்குள் தங்களது விவரங்களுடன் summerfestivalvalparai2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகைப்படங்களை அனுப்பிட வேண்டும்.

இதையும் படிங்க | உதகையில் மாணவர்களுக்கான பயிற்சி முகாமில் பறை இசைத்து மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ்!

top videos

    இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ.1000மும் வழங்கப்படவுள்ளது. இப்போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்கள் கோடை விழாவின் புகைப்படக் கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    First published:

    Tags: Coimbatore, Local News