முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / ரூ.20-க்கு சிக்கன் பிரியாணி... கோவை உணவகத்திற்கு படையெடுத்த மக்கள் கூட்டம்!

ரூ.20-க்கு சிக்கன் பிரியாணி... கோவை உணவகத்திற்கு படையெடுத்த மக்கள் கூட்டம்!

பிரியாணி வாங்க அலைமோதிய மக்கள்

பிரியாணி வாங்க அலைமோதிய மக்கள்

Coimbatore rs.20 biriyani | உணவக திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகையாக 200 பேருக்கு 20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை அருகே உணவக திறப்பு விழாவையொட்டி ரூ.20க்கு வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கோவை மாவட்டம் சிறுமுகை வ.உ.சி நகரை சேர்ந்த ரமேஷ் குமார் சிறுமுகை விஸ்கோர்ஸ் தொழிற்சாலை அருகில் கூட்டாஞ்சோறு உணவகம் இன்று தொடங்கினார். திறப்பு விழாவை முன்னிட்டு பொதுமக்களை கவர்வதற்காகவும் உணவகத்தில் ருசி மற்றும் சுவையை தெரிந்து கொள்வதற்காக பார்சல் வாங்குபவர் முதல் 200 பேருக்கு குறைந்த விலையில் சிக்கன் பிரியாணி ரூ. 20-க்கு வழங்கப்படும் என்று துண்டு பிரசுரத்தில் அறிவிப்பு செய்திருந்தார்.

இந்த அறிவிப்பை கண்டதும் பொதுமக்கள் காலை முதலே உணவகம் முன்பு குவியத் தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல பொதுமக்களின் வருகை அதிகரித்தது. ரூ.20-க்கு சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. ஆண்களும், பெண்களும் முண்டியடித்துக் கொண்டு சிக்கன் பிரியாணியை வாங்கிச் சென்றனர்.

பிரியாணியை வாங்குவதில்  தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. 20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வாங்க வந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் உணவக நிர்வாகிகள் திணறினார்கள். சுமார் 200 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. ரூ. 20க்கு பார்சலில் சிக்கன் பிரியாணி கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். உணவக உரிமையாளர்களின் இந்த செயல் பொதுமக்களில் ஒரு சிலருக்கு மகிழ்ச்சியையும் ஒரு சிலருக்கு ஏமாற்றத்தையும் தந்தது.

செய்தியாளர்: எஸ் யோகேஸ்வரன், மேட்டுப்பாளையம்.

top videos
    First published:

    Tags: Biriyani, Coimbatore, Local News