முகப்பு /கோயம்புத்தூர் /

வீடு இருக்கு சாவி இல்லை.. பட்டா இருக்கு நிலம் இல்லை- கோவையில் வாயில் கருப்பு துணி கட்டி மக்கள் போராட்டம்

வீடு இருக்கு சாவி இல்லை.. பட்டா இருக்கு நிலம் இல்லை- கோவையில் வாயில் கருப்பு துணி கட்டி மக்கள் போராட்டம்

X
வாயில்

வாயில் துணி கட்டி போராட்டம்

Coimbatore | கோயம்புத்தூரில் பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

பட்டா மற்றும் வீட்டு வசதி வாரியத்தில் குடியிருப்பு கேட்டு கடந்த ஆறு மாதங்களாக அலைவதாக கூறி வாயில் கருப்பு துணி கட்டிய படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் தடாகம் சாலை, வேலாண்டிபாளையம், வெங்கடாபுரம், சிவாஜி காலனி, பெரியநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும், புறம்போக்கு இடத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் செல்வபுரத்தில் உள்ள குடிசை மாற்று அலுவலகத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இதில் சிலருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் நிலத்திற்கான பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளுக்கான சாவியும், வழங்கப்பட்ட பட்டாவிற்கான முறையான நிலமும் பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கடந்த ஆறு மாதங்களாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் அலைந்து வருகின்றனர்.

பச்சிளம் குழந்தையை கைப்பையில் சுற்றி சாலையில் வீசிய கொடூரம்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்

இதனிடையே அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகக்கூறி சம்மந்தப்பட்ட மக்கள் வாயில் கருப்பு துணியை கட்டியபடி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

First published:

Tags: Coimbatore, Local News