Home /coimbatore /

Coimbatore | சிறைச்சாலை மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி: குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்கும் கோவைவாசிகள்

Coimbatore | சிறைச்சாலை மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி: குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்கும் கோவைவாசிகள்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் அரசுப் பொருட்காட்சி

Coimbatore | கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சிக்கு பொதுமக்கள் குழந்தைகளுடன் சென்று மகிழ்கின்றனர்.

கோவையில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியில் என்னென்ன? சிறப்பம்சங்கள் உள்ளன என்பதைப் பார்க்கலாம்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக அரசு பொருட்காட்சி நடைபெறவில்லை.

கொரோனா பரவல் குறைந்துள்ள இந்த சூழலில், மீண்டும் பொருட்காட்சி நடத்த திட்டமிட்ட கோவை மாவட்ட நிர்வாகம் கடந்த 11ம் தேதி அரசு பொருட்காட்சியை துவங்கியது. இந்த பொருட்காட்சி வரும் ஜூலை மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கோயம்புத்தூர் அரசுப் பொருட்காட்சி


இதில் அரசின் பல்வேறு துறைகளின் சாதனைகளை விளக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய 32 ஸ்டாகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள், விதவிதமான உணவு வகைகள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் இந்த பொருட்காட்சி நடைபெறுவதால் தினமும் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

கோயம்புத்தூர் அரசுப் பொருட்காட்சி


மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த அரசு பொருட்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் தினமும் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் இந்த பொருட்காட்சிக்கு வந்து செல்கின்றனர்.

கொரோனா காலத்தில் பட்ஜெட் காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் அனைவரும் இந்த பொருட்காட்சிக்கு சென்றால் மகிழ்ச்சி நிச்சயம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி