ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் மாடுகளை அலங்கரித்து மாட்டுப் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த மக்கள்

கோவையில் மாடுகளை அலங்கரித்து மாட்டுப் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த மக்கள்

X
மாட்டுப்

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

Coimbatore Mattu Pongal | கோவையில் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோவையில் அதிகாலையிலேயே மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பொங்கலை வைத்து மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தைப் பொங்கலின் மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதன்படி, தொழில் நகரான கோவையில் விவசாயமும் பிரதான தொழிலாக உள்ளது. உழவுத்தொழிலுக்கு உதவும் மாடுகளைஇங்குள்ள விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.

மாடு வழிபாடு

இதனிடையே மாட்டுப்பொங்கல் தினத்தில் கோவையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாடுகளுக்காக பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பாரதிநகரில் அதிகாலை முதலே மாட்டின் உரிமையாளர்கள் மாட்டை குளிப்பாட்டி மாட்டின் மீது மஞ்சள் தெளித்து, நெற்றியில் குங்குமம் வைத்து, பூமாலை போட்டு வணங்கி வழிபட்டனர்.

அதேபோல மாட்டிற்கு புதிய மூக்கணாங் கயிறைமாற்றி புதிய கயிறுகளை அணிவித்தனர். தொடர்ந்து மாட்டிற்குபொங்கல் வழங்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

செய்தியாளர்: சௌந்தர் மோகன், கோயம்புத்தூர்.

First published:

Tags: Coimbatore, Local News