கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி. அதேபகுதியில் பெட்டிக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இவரது தம்பி உயிரிழந்துவிட, அவரது மனைவி 2வது திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு நித்தின் என்ற மகன் உள்ளார். நித்தினை பார்வதி கவனித்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனதளவில் பாதிக்கப்பட்டதால் காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார்.
இதனிடையே தனியார் காப்பகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அந்த காப்பகம் மூடப்பட்டு அங்கிருந்தவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். காப்பகமும் மூடப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இந்த சம்பவத்தில் இருந்து தனது தம்பி மகனைத் தேடி பார்வதியும், நித்தினின் பாட்டியும் காவல் நிலையங்கள், வட்டாட்சியர் மற்றும் ஆட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
எங்கு சென்றாலும், "இங்கே செல்லுங்கள்.. அங்கே செல்லுங்கள்" என்று அலைக்கழிப்பதாக மூதாட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து பார்வதி கூறுகையில், “எனது தம்பி மகன் மாயமாகி பல மாதங்களாக தேடி வருகிறேன்” தெரிவித்தார். மேலும், நித்தின் இருக்கும் இடம் தெரிந்தால் எப்படியாவது அவரை மீட்டு வந்து சொந்த பராமரிப்பில் வைத்து வளர்த்துக் கொள்வதாகவும் மூதாட்டிகள் தெரிவித்தனர்.
மாயமானவரின் ஒரே ஒரு புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு அங்குமிங்குமாய் அலைக்கழிக்கப்படும் மூதாட்டிகளுக்கு தீர்வு கிடைப்பதில் அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும் என்பதே இவர்கள் குறித்து அறிந்த பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News