ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை-நாகர்கோவில் ரயில் 3 நாட்கள் ரத்து - பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கோவை-நாகர்கோவில் ரயில் 3 நாட்கள் ரத்து - பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ரயில்கள் ரத்து

ரயில்கள் ரத்து

Coimbatore District | கோவையில் இருந்து காலை 8 மணிக்கு நாகர்கோவில்லுக்கு புறப்படும் ரயில், இடையே ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் கோவையில் இருந்து நாகர்கோவில்லுக்கு புறப்பட்டுச் செல்லும் ரயில் இடையே ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மதுரை-தூத்துக்குடி, திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால், கோவையில் இருந்து இன்றுமுதல் 11ஆம் தேதிகளில் காலை 8 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்:16322), ஈரோடு - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ரயில் கோவை முதல் ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் ஈரோடு முதல் நாகர்கோவில் வரை இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, நாகர்கோவிலில் இருந்து ஜனவர் 9,10,11ஆம் தேதிகளில் கோவை புறப்பட்டு வர வேண்டிய ரயில் (எண்:16321), நாகர்கோவில் - ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது. மாறாக, ஈரோட்டில் இருந்து புறப்பட்டு, கோவை வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : மேகங்கள் விளையாடும் வால்பாறை... 3 நாள் டூர் பிளான் - குடும்பத்தோடு என்ஜாய் பண்ணலாம்!

எனவே, பயணிகள் தேவையான முன்னேற்பாடுகளையும், மாற்று பயணத்திற்கான வழிமுறைகளையும் மேற்கொண்டு சிரமங்களை தவிர்த்து விடுங்கள்.

First published:

Tags: Coimbatore, Local News, Train