Home /coimbatore /

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு... கோயம்புத்தூர் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு... கோயம்புத்தூர் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பொள்ளாச்சி பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோவை குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pollachi, India
    தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பி.ஏ.பி திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் முழுகொள்ளளவை எட்டி உள்ளன.

    கடந்த 2 நாட்களாக கோவை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 1,100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 1,100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், வனப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக குரங்கு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் நீர்வரத்தை பொறுத்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி பெய்த மழைஅளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு: சோலையார் 77, பரம்பிக்குளம் 37, ஆழியாறு 48, திருமூர்த்தி 17, வால்பாறை 29, மேல்நீராறு 33, கீழ்நீராறு 24, காடம்பாறை 31, சர்க்கார்பதி 83, வேட்டைக்காரன்புதூர் 62.6, தூணக்கடவு 56, பெருவாரிபள்ளம் 38, அப்பர் ஆழியாறு 6, பொள்ளாச்சி 17, நல்லாறு 12.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி