Home /coimbatore /

Coimbatore | கோவையில் ரூ.101க்கு ஸ்மார்ட் போன்.. செல்போன் கடையின் அதிரடி ஆஃபர்

Coimbatore | கோவையில் ரூ.101க்கு ஸ்மார்ட் போன்.. செல்போன் கடையின் அதிரடி ஆஃபர்

மொபைல்

மொபைல் போன் விற்பனை

Coimbatore | கோயம்புத்தூரில் புதிதாக திறக்கப்படவுள்ள மொபைல் கடையில் 101 ரூபாய்க்கு ஆண்ட்ராய்டு போன் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நவ நாகரீகம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் உபயோகப்படுத்தாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு மனிதனின் மூன்றாம் கைபோல் மாறிவிட்டது ஸ்மார்ட் போன்கள்.

தகவல் தொடர்புக்கு மட்டும் பயன்பட்டு வந்த தொலைபேசிகள் தற்போது ஸ்மார்ட் வடிவில் மனிதனின் பல்வேறு வேலைகளையும் சுலபமாக்குகின்றன. இப்படியான அத்தியாவசிய பொருளாக மாறிப்போன ஸ்மார்ட் போன்கள் சந்தைகளில் ரூ.5 அயிரம் முதல் லட்சங்களில் விற்பனையாகி வருகிறது.

மொபைல் கடை


இந்த நிலையில் கோவையில் துவங்கப்படும் செல்போன் கடை ஒன்றில் வெறும் 101 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் விற்பனை


காந்திபுரம் 9வது வீதியில் அமைய உள்ள பிக்சல் கம்யூனிகேஷன் என்ற செல்போன் கடையில் உபயோகப்படுத்தப்பட்ட செகண்ட் ஹேண்ட் செல்போன்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. வரும் 13ம் தேதி இந்த கடை திறக்கப்பட உள்ளது.

திறப்பு விழா சலுகையாக இந்த கடையில் 3 ஆயிரம் ரூபாய்க்கு உபயோகப்படுத்தப்பட்ட ஒரு செல்போனை வாங்குபவர்கள் 101 ரூபாய் செலுத்தி புதிய ஸ்மார்ட் போனை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கோவை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தொடர்பான விவரங்களுக்கு 9003336461 என்ற எண்ணை அழைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி