Home /coimbatore /

கோவையில் வரும் 17ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: 5 மி.மீ வரை பெய்யும் என அறிவிப்பு

கோவையில் வரும் 17ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: 5 மி.மீ வரை பெய்யும் என அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை தாலுகா பகுதிகளில், இந்த வாரம் அதிகபட்சமாக 5 மி.மீ வரை மழை பெய்யும் என்று வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை தாலுகா பகுதிகளில், இந்த வாரம் அதிகபட்சமாக 5 மி.மீ வரை மழை பெய்யும் என்று வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், வரும், 17ம் தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக, 5 மி.மீ வரையில் மழை பதிவாகும். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து, பகல் நேர வெப்பநிலை குறையும்.

    அதேசமயம், 20 கி.மீ வேகத்தில் அதிவேக காற்று வீசும். கால்நடைகளை மழையில் முளைத்த புற்களை மேய விடக்கூடாது.

    சுத்தமான குடிநீர் வழங்கி, கொட்டகையின் தரையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். வாழை மற்றும் மரப்பயிர்களுக்கு முட்டுக்கொடுத்து, கரும்பில் தோகை உரித்துக்கட்ட வேண்டும் இவ்வாறு கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி