ஹோம் /கோயம்புத்தூர் /

தொலைநோக்கி வழியாக விண்வெளியை பார்த்து ஆச்சரியம் அடைந்த கோவை மசக்காளிபாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள்

தொலைநோக்கி வழியாக விண்வெளியை பார்த்து ஆச்சரியம் அடைந்த கோவை மசக்காளிபாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள்

X
கோவை

கோவை

Masakalipalayam Govt school students : கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தொலைநோக்கி வழியாக புதன், வியாழன், சனி ஆகிய கோள்களையும் நிலவு மற்றும் கார்த்திகை நட்சத்திரங்களை பார்த்து ஆச்சரியமடைந்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பள்ளிகளிலேயே 'ஸ்மார்ட் வகுப்பறைகள்' கொண்ட பள்ளியாக இருப்பதால் இங்கு 'சீட்' பெறுவதற்காக பெற்றோர்கள் அலைமோதி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்களின் சிபாரிசு கடிதங்களுடன் மாணவர் சேர்க்கைக்கு வந்த பெற்றோர்களும் உள்ளனர். அந்த அளவுக்கு மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு அனைத்து விதமான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வானியல் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக தொலைநோக்கிமூலமாக விண்வெளியையும், கோள்களையும், துணைக்கோள்களையும் பார்க்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முதன்முறையாக தொலைநோக்கி வழியாக புதன், வியாழன், சனி ஆகிய கோள்களையும் நிலவு மற்றும் கார்த்திகை நட்சத்திரங்களை பார்த்து ஆச்சரியமடைந்தனர். இவர்களுக்கு விண்வெளி மற்றும் கோள்களின் தன்மைகள் குறித்து ஆசிரியர்கள் விளக்கமளித்தனர்.

இந்த நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Coimbatore, Local News