Home /coimbatore /

Coimbatore News : 24 மணி நேரத்தில் தங்கத்தில் நுண்ணிய செஸ் காயின்கள் உருவாக்கி அசத்திய கோவை நபர்..

Coimbatore News : 24 மணி நேரத்தில் தங்கத்தில் நுண்ணிய செஸ் காயின்கள் உருவாக்கி அசத்திய கோவை நபர்..

கோவை

கோவை நபரின் அசாத்திய திறமை..

Coimbatore News : செஸ் ஒலிம்பியாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தங்கத்தில்  நுண்ணிய செஸ் காயின்கள் உருவாக்கி கோவையை சேர்ந்த நபர் அசத்தியுள்ளார்.

கோவை: தமிழகத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 500மில்லி கிராம் தங்கத்தில் நுண்ணிய செஸ் காயின்கள் உருவாக்கியுள்ளார் கோவையை சேர்ந்த தன்னார்வலர்.

சர்வதேச ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நாளை (ஜூலை 28) துவங்குகிறது. இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி, தமிழகத்தில் நடைபெறுகிறது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

இப்போட்டியானது வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் கோவையில் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிறுத்தங்கள் செஸ் போர்டு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தங்கத்தில் நுண்ணிய செஸ் காயின்கள்


இந்த சூழலில் கோவை புதூரை சேர்ந்த சேர்ந்த தன்னார்வலரான யு.எம்.டி ராஜா என்பவர் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக 500 மில்லி கிராம் தங்கத்தில் மிக நுண்ணிய செஸ் காயின்களை உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து யு.எம்.டி ராஜா கூறியதாவது:

செஸ் ஒலிம்பியாட் போட்டியை நாடே மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறது. தமிழகத்தில் இந்த போட்டி நடத்தப்படுவது பெருமையளிக்கிறது. மக்கள் மத்தியில் இந்த விளையாட்டு பிரபலமடைய 500 மில்லி கிராம் தங்கத்தில் நுண்ணிய அளவில் செஸ் காயின்களை வடிவமைத்துள்ளேன்.

நுண்ணிய செஸ் காயின்கள்...


இதன் அளவை காட்ட ஒரு ஊசி முனையில் நான் தயாரித்த செஸ் காயின்களை நிறுத்தியுள்ளேன். இதனை 24 மணி நேரத்தில் செய்து முடித்தேன்.

யு.எம்.டி ராஜா


கொரோனா காலத்தில் மாஸ்க் அணிதல் குறித்து தங்கத்தில் மிகச்சிறிய மாஸ்க் செய்தேன், ஹெச்.ஐ.வி எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு, சானிடைசர் உபயோகித்தல் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களையும் செய்துள்ளேன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த செஸ் காயின்களை வடிவமைத்தமைக்கு தமிழனாக பெருமையடைகிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

கோவைப்புதூரை சேர்ந்த யு.எம்.டி ராஜாவிடம் பேச விரும்புபவர்கள் அவரது தொலைபேசி எண்ணில் 98430 38660 அழைக்கலாம்..
Published by:Arun
First published:

Tags: Chess, Chess Olympiad 2022, Coimbatore, Local News

அடுத்த செய்தி