Home /coimbatore /

Coimbatore | மலுமிச்சம்பட்டி ஸ்ரீநாக சக்தி அம்மன் தியான பீடம் - சிறப்புகள் என்ன?

Coimbatore | மலுமிச்சம்பட்டி ஸ்ரீநாக சக்தி அம்மன் தியான பீடம் - சிறப்புகள் என்ன?

ஸ்ரீநாக

ஸ்ரீநாக சக்தி அம்மன் கோவில்

Coimbatore | கோயம்புத்தூர் மலுமிச்சம்பட்டி ஸ்ரீநாக சக்தி அம்மன் தியான பீடத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் வருகை தருகின்றனர்.

கோவை மலுமிச்சம்பட்டியில் ஸ்ரீ நாக சக்தி அம்மன் தியான பீடம் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முக்கிய குறிக்கோளாக இயற்கை வழி மூலிகைகள், யோகா பயிற்சிகள் மற்றும் தியான முறைகள் கற்றுத் தரப்படுகிறது.

மேலும், உடல் உபாதைகளுடன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூலிகை மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த கோவிலுக்கு வந்து, அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் கருவறையில் அமைந்துள்ள நாக சர்ப்பத்திற்கு தாங்களாகவே பால் அபிஷேகம் செய்கின்றனர்.

ஸ்ரீ நாக சக்தி அம்மன் கோவில்


பாவ கர்மாக்கள் நீங்கும் வகையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாள்களில் பசுவுக்கு புல், தவிடு, புண்ணாக்கு கொடுத்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

ஸ்ரீ நாக சக்தி அம்மன் கோவில்


ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணிக்கு மகா தீபாராதனை, 12 மணியளவில் உச்சிகால பூஜை, 6 மணிக்கு ஸ்ரீ சக்ர சக்தி பூஜை, இரவில் அர்தஜாம பூஜை, வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், ஞாயிற்றுக்கிழமை ருத்திராபிஷேகமும் நடைபெறுகிறது. இந்த கோவிலில் உள்ள நாக சர்ப்பத்திற்கு பால் அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாக மாறுவதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீ நாக சக்தி அம்மன் கோவில்


கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எலுமிச்சம்பழம், கபசுர குடிநீர் மற்றும் மூலிகை பால் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. மலுமிச்சம்பட்டி கற்பகம் கல்லூரியிலிருந்து வரும் இடது புற வளைவில் திரும்பி நாக சக்தி அம்மன் தியான பீடத்தை அடையலாம்.

நாக சக்தி அம்மன் தியான பீடம் செல்லும் வழிக்கான கூகுள் வரைபடம்



உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி