ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் சென்டர்மீடியனாக மணல் மூட்டைகள்...  விபத்து ஏற்படும் முன் ரவுண்டானா அமைக்க மக்கள் கோரிக்கை

கோவையில் சென்டர்மீடியனாக மணல் மூட்டைகள்...  விபத்து ஏற்படும் முன் ரவுண்டானா அமைக்க மக்கள் கோரிக்கை

சாலையில்

சாலையில் மணல் மூட்டைகள்

Coimbatore | கோயம்புத்தூரின் முக்கிய சாலையில் ரவுண்டனா அமைக்கப்படாமல் மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை சுங்கம் பகுதியில் சாலைகளுக்கு மத்தியில், செண்டர்மீடியனாக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கோவை- திருச்சி சாலையில் ரெயின்போ முதல் அல்வேர்னியா பள்ளி வரை மேம்பாலம் அமைக்கப்பட்டது. பாலம் கட்டுவதற்காக சுங்கம் பகுதியில் இருந்த ரவுண்டான இடிக்கப்பட்டது. பின்னர் மேம்பால பணிகள் நிறைவடைந்தது. அந்த வழியில்  போக்குவரத்தும் இயக்கப்பட்டது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்த பழைய சாலையும் புனரமைக்கப்பட்டு புதிய தார் சாலை போடப்பட்டது. ஆனால் இங்கு இடிக்கப்பட்ட ரவுண்டானா மட்டும் மீண்டும் கட்டப்படவில்லை.

சுங்கம் பகுதியில் இருந்து உக்கடம், புலியகுளம் செல்லவும், திருச்சி சாலை மார்க்கமாக சிங்காநல்லூர், டவுன்ஹால் செல்லவும், ரெட்பீல்ஸ் சாலை மார்க்கமாக அவினாசி சாலை செல்லவும் இந்த ரவுண்டானா உதவியாக இருந்தது. இது இல்லாததால் பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் செல்ல சிரமங்கள் ஏற்படுகிறது. எப்போதும் படு 'பிசியாக' செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சாலையில் தற்போது போக்குவரத்து நெரிசல் கூட அதிகரித்துவிட்டது.

தற்போது ரவுண்டான அகற்றப்பட்டதால் சுங்கம் பகுதியில் மணல் மூட்டைகள் சென்டர்மீடியனாக அடுக்கப்பட்டுள்ளன. இந்த மணல் மூட்டைகள் சரியாமல் தடுக்க கட்டைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுவே வெவ்வேறு சாலைகளை பிரிக்கும் தடுப்புகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மணல் மூட்டைகளில் ரிப்லெக்டிங் ஸ்டிக்கர்களும் முறையாக ஒட்டப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகங்களுக்கு இந்த தடுப்புக்கள் இருப்பதே தெரிவதில்லை. மணல் மூட்டைகளில் உள்ள மணல் சாலையில் சிந்துவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் திரும்பும் போது சறுக்கி விழும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டியான கோவை மாநகராட்சியில் ரவுண்டான அல்லது தடுப்புகள் அமைப்பதற்கு கூட வழி இல்லையா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதேபோல் இந்த மணல் மூட்டை தடுப்புகளால் சிறு சிறு விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக விட்டதாக தெரிவிக்கின்றனர் இந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்.

இந்த பகுதியில் பெரிய விபத்து ஏற்படும் முன்னதாக மணல் மூட்டைகளை அகற்றி முறையான தடுப்புகள் அமைத்து, அதில் தாவரங்களை வளர்த்தால் பாதுகாப்பும், அழகும் ஒரு சேர கிடைக்குமே.

Published by:Karthick S
First published:

Tags: Coimbatore, Local News