Home /coimbatore /

கோவை-மதுரை இடையே நாளை முதல் முன்பதிவற்ற விரைவு ரயில் இயக்கம்- பயணிகள் மகிழ்ச்சி

கோவை-மதுரை இடையே நாளை முதல் முன்பதிவற்ற விரைவு ரயில் இயக்கம்- பயணிகள் மகிழ்ச்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோவை-மதுரை, மதுரை-கோவை இடையே நாளை முதல் முன்பதிவற்ற ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை-மதுரை, மதுரை-கோவை இடையில் நேரடி ரயில் நாளை முதல் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. மேலும் பயணிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.

    கோவையிலிருந்து மதுரைக்கு நேரடியாக ரயில் இயக்கம் இல்லாமல் இருந்தது. மேலும், மதுரைக்கு செல்ல வேண்டும் என்றால், கோவையில் இருந்து பழனி சென்று, பிறகு அங்கிருந்து இணைப்பு ரயிலில் செல்ல வேண்டும்.

    அதே போல், மதுரையிலிருந்தும் கோவைக்கு நேரடியாக ரயில் இயக்கம் இல்லை. மதுரை-பழனி, பழனி-கோவை ரயில் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த ரயிலாது கோவை-பழனி, பழனி-மதுரை வழித்தடத்தில் 06462, 06463 ஆகிய எண்களிலும், மதுரை - பழனி, பழனி - கோவை வழித்தடத்தில் 06479, 06480 ஆகிய எண்களிலும்
    இயக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கோவை - பழனி - மதுரை இணைப்பு ரயில் வருகிற நாளை முதல் கோவையில் இருந்து மதுரைக்கு 16721 என்ற எண்ணிலும், மதுரையில் இருந்து கோவைக்கு 16722 என்ற எண்ணிலும் முன்பதிவற்ற விரைவு ரயிலாக இயக்கப்படுவதாக
    ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த ரயிலானது, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூா், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, வாடிப்பட்டி, சோழவந்தான், கூடல் நகா் உள்ளிட்டநிலையங்களில்நின்று செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி