முகப்பு /கோயம்புத்தூர் /

லேப்டாப்பை நைஸாக பையில் போட்டுக் கொண்ட இளம்பெண்... அதிர வைக்கும் திருட்டு காட்சிகள்

லேப்டாப்பை நைஸாக பையில் போட்டுக் கொண்ட இளம்பெண்... அதிர வைக்கும் திருட்டு காட்சிகள்

X
லேப்டாப்

லேப்டாப் திருடிய இளம்பெண்

Coimbatore theft | கோவை காந்திபுரத்தில் உள்ள லேப்டாப் விற்பனையகத்திற்கு வந்த இளம் பெண் ஒருவர் லேப்டாப்பை லாவகமாக திருடி விற்பனையாளரிடம் மாட்டிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை காந்திபுரம் பகுதியில் ஏராளமான துணி மற்றும் நகைக்கடைகள், கம்ப்யூட்டர் லேப்டாப் மற்றும் செல்போன் விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ற லேப்டாப் விற்பனையகம் ஒன்றுமம் செயல்பட்டு வருகிறது.

இந்த விற்பனையகத்திற்கு இளைஞர் மற்றும் ஒரு இளம்பெண் வந்தனர். அங்கு பணியில் இருந்த விற்பனையாளரிடம் கம்ப்யூட்டருக்கு மவுஸ் வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த விற்பனையாளர் இளம் பெண்ணுடன் வந்த இளைஞருக்கு மவுஸ் காண்பித்து கொண்டிருந்தார்.

இந்த கன நேரத்தை பயன்படுத்தி கடையில் டிஸ்ப்ளேவில் வைக்கப்பட்டிருந்த 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு லேப்டாப்பை எடுத்த இளம் பெண் அதனை சட்டென தனது பேக்கில் வைத்துக் கொண்டார்.

இளைஞரிடம் மவுஸ் காண்பித்துவிட்டு வந்த அந்த விற்பனையாளர் டிஸ்பிளேவில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப் காணாமல் போனதால் அதிர்ந்து போனார். சற்று நேரத்திற்கு முன்பு இருந்த லேப்டாப் மாயமானதால் இளம் பெண் மீது சந்தேகமடைந்த விற்பனையாளர் இதுகுறித்து இளம்பெண்ணிடம் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க | கோடை காலத்தில் அடிக்கடி ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை!

முதலில் அந்த பெண் தான் எடுக்கவில்லை என மறுத்தார். அவரது பேச்சால் சந்தேகமடைந்த விற்பனையாளர் பெண்ணிடம் இருந்த பேக்கை திறந்து காண்பிக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

பேக்கை திறந்து பார்த்த போது அதில் லேப்டாப் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணுடன் வந்த இளைஞர் பேக்கில் இருந்த லேப்டாப்பை எடுத்து விற்பனையாளரிடம் திரும்ப கொடுத்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் மவுஸும் வாங்காமல் கடையை விட்டு ஓட்டம் பிடித்தனர். தற்போது சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Coimbatore, Local News, Theft