முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை... தடயத்தை மறைக்க மிளகாய் பொடி தூவிய கொலையாளி..!

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை... தடயத்தை மறைக்க மிளகாய் பொடி தூவிய கொலையாளி..!

கொலை செய்யப்பட்ட பெண்

கொலை செய்யப்பட்ட பெண்

Coimbatore Murder Case | கொலையாளிகள் வீட்டில் இருந்து பணம், நகை என எதையும் திருடிச் செல்லவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த கரைப்பாளையம் புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (54). இவரது மனைவி தங்கமணி, இவர்களது பிள்ளைகளுக்கு திருமணமான நிலையில் கணவன் - மனைவி மட்டும்  தனியாக வசித்து வருகின்றனர். தங்கமணி அதே பகுதியில் வட்டிக்கு பணம் விட்டு வசூலித்து வருவதாக கூறப்டுகிறது. இந் நிலையில் நேற்று மாலை சுப்பிரமணி சொந்த வேலையாக வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் சமையலறையில் கழுத்து அறுபட்ட நிலையில் தங்கமணி சடலமாக கிடந்துள்ளார்.

மனைவி சடலமாக கிடப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, சத்தம் போட அருகில் இருப்பவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். பின்னர் சம்பவம் குறித்து அன்னூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அன்னூர்  போலீசார், மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

இதையும் படிங்க:மது வாங்கினால் இனி கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும்... ஏன் தெரியுமா?... வெளிவந்த முக்கிய தகவல்..!

top videos

    அப்போது கொலையாளிகள் வீட்டில் இருந்து பணம், நகை என எதையும் திருடிச் செல்லவில்லை என்பதும், கொலை செய்த தடயத்தை மறைக்க இறந்த பெண்ணின் உடலை சுற்றிலும் மிளகாய் பொடி தூவிவிட்டு தப்பி சென்று இருப்பதும் தெரியவந்தது.  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    First published:

    Tags: Coimbatore, Crime News