Home /coimbatore /

Coimbatore | 3 ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை: கள்ளிபாளையம் பஞ்சாயத்து மக்கள் குற்றச்சாட்டு

Coimbatore | 3 ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை: கள்ளிபாளையம் பஞ்சாயத்து மக்கள் குற்றச்சாட்டு

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் தண்ணீர் போராட்டம்

கோவை கள்ளிப்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் 3 ஆண்டுகளாக குடிநீர் கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பாளையம் பஞ்சாயத்தில் ராயல் என் கிளேவ் என்ற குடியிருப்பு உள்ளது. இங்கு 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் லே-அவுட் பிரிக்கப்பட்டு, பலரும் தங்களுக்கான இடங்களை வாங்கி வீடு கட்டி வசித்து வருகின்றனர். தற்போது 200க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

இந்த நிலையில், தங்கள் குடியிருப்பு அமைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கோயம்புத்தூர் தண்ணீர் போராட்டம்


இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "நாங்கள் வங்கிக் கடன் பெற்று இங்கு வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். மூன்று ஆண்டுகளாகியும் எங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை பஞ்சாயத்தில் மனு அளித்துள்ளோம்.

கோயம்புத்தூர் தண்ணீர் போராட்டம்


எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனல மாதம் தோறும் 3 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து லாரி தண்ணீர் வாங்கி உபயோகிக்கிறோம். ஏற்கனவே வங்கிக் கடனில் தவிக்கும் எங்களுக்கு இது மேலும் சுமையாக உள்ளது. உடனடியாக எங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்" என்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி