கோவை அரசு கலைக்கல்லூரியில் 23 இளங்கலை பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. 2022–23 ம் கல்வியாண்டில் 1,433 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது.
இதற்காக நேரடியாக விண்ணப்பம் வழங்கப்படாது என்றும், மாணவர்கள் இணையதளம் மூலம் மட்டுமே (www.tngasa.org, www.tngasa.in ) விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 22ம் தேதி முதல், ஜூலை 7ம் தேதி வரை மாணவர்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
அரசின் இந்த முடிவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு கல்லூரியின் உட்கட்டமைப்புகளை பார்வையிட்டும், பேராசிரியர்களிடம் ஆலோசித்தும் பாடத்தை தேர்வு செய்யும் வாய்ப்பு இல்லாத சூழல் உருவாவதாகவும்,எனவே இணையதளம் மட்டுமல்லாது நேரடியாகவும் விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.