முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / "நண்பன் ஒருவன் வந்த பிறகு" - குடத்தில் மாட்டிய ஆட்டை காப்பாற்றிய குட்டி ஆடு - நெகிழ்ச்சி வீடியோ

"நண்பன் ஒருவன் வந்த பிறகு" - குடத்தில் மாட்டிய ஆட்டை காப்பாற்றிய குட்டி ஆடு - நெகிழ்ச்சி வீடியோ

ஆடுகள்

ஆடுகள்

Coimbatore goat | கோவையில் பிளாஸ்டிக் குடத்திற்குள் தலையில் விட்டு சிக்கி கொண்ட ஆட்டுக்குட்டி குடத்துடனே நடமாடி வந்தது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் பிளாஸ்டிக் குடத்திற்குள் தலையை விட்டு சிக்கிக்கொண்ட ஆட்டுக்குட்டியை மற்றொரு ஆட்டுக்குட்டி மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை சங்கனூர் சாலையில் குடிநீர் குழாயின் அருகே பிளாஸ்டிக் குடம் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு சென்ற ஆட்டுக்குட்டி ஒன்று, தனது தலையை குடத்திற்குள் நுழைத்தது. பின்னர் குடத்தில் இருந்து தலையை எடுக்க முடியாததால் வெகு நேரமாக அங்கும் இங்கும் அலைந்து தவியாய் தவித்தது...

இதனைக் கண்ட மற்றொரு ஆடும், ஆட்டுக்குட்டியும் உதவிக்கு வந்தன. குறிப்பாக ஆட்டுக்குட்டி தனது தலையையும் குடத்திற்குள் நுழைத்து, ஆபத்தில் இருந்த நட்புக்கு உதவியது. அதன் துணையோடு, நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், ஆட்டுக்குட்டி தனது தலையை குடத்தில் இருந்து மீட்டது.

இதையும் படிங்க | வீரப்பன், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள்... கோவையில் மக்களைக் கவர்ந்த அருங்காட்சியகம்

ஆபத்தில் சிக்கிய நண்பனை மீட்க தனது தலையையும் குடத்தில் நுழைத்த ஆட்டுக்குட்டியின் அன்பு, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து இரு ஆட்டுக்குட்டிகளும் அன்பை பரிமாறிக் கொண்டன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

top videos

    சமூக வலைதளங்களில் "நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் ... முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா” என்ற காதல் தேசம் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை பதிவிட்டு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

    First published:

    Tags: Coimbatore, Local News